6 மொழிகளில் வெளியான 'புஷ்பா 2' பாடல்.. 6 மொழிகளுக்கும் ஒரே பாடகி..!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ படத்தின் பாடல் சற்றுமுன் ஆறு மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆறு மொழிகளில் உள்ள பாடலை ஒரே பாடகி பாடி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற ’புஷ்பா புஷ்பா’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகின நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் என ஆறு மொழிகளில் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் ஆறு மொழிகளிலும் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெலடி பாடலாக அமைந்துள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தளத்தில் இந்த பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் ‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதும் தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.