'புஷ்பா 2' படத்தின் புதிய ரிலீஸ் தேதி.. உற்சாகத்தில் பா ரஞ்சித்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ’புஷ்பா 2’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆகி வருவதாகவும் அதனால் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ’புஷ்பா 2’ படத்தின் குழுவினர் இந்த படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு காரணமாக ’புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் தனது ‘தங்கலான்’ படத்தின் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்த நிலையில் தற்போது ’புஷ்பா 2’ வழி விட்டதால் ஆகஸ்ட் 15ஆம் தேதியை அவர் பிக்ஸ் செய்துள்ளதாகவும் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
’புஷ்பா 2’ திரைப்படம் தெலுங்கு படமாக இருந்தாலும் தமிழிலும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் மிகப்பெரிய அளவில் தியேட்டர்கள் கிடைக்கும் என கூறப்பட்டது. எனவே அந்த படத்துடன் போட்டி போட பல தயாரிப்பாளர்கள் தயங்கினர். இந்த நிலையில் ’புஷ்பா 2’ திரைப்படம் ’தங்கலான்’ படத்திற்கு வழி விட்டதை அடுத்து பா ரஞ்சித் உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
#Pushpa2TheRule in cinemas from December 6th, 2024. pic.twitter.com/BySX31G1tl
— Allu Arjun (@alluarjun) June 17, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments