'புஷ்பா 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 'இந்தியன் 2' படத்திற்கு சிக்கலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் சுமார் 400 கோடி ரூபாய் வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே தேதியில் தான் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் ‘புஷ்பா 2’ மற்றும் ‘இந்தியன் 2’ ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
THE WAIT IS OVER… ‘PUSHPA 2’ ON INDEPENDENCE DAY 2024… Team #Pushpa2 finalises the release date… Will arrive in *cinemas* on [Thursday] 15 Aug 2024.#AlluArjun #RashmikaMandanna #Sukumar #MythriMovieMakers pic.twitter.com/Ynz2X4uo61
— taran adarsh (@taran_adarsh) September 11, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com