close
Choose your channels

புஷ்பா 2 ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்.. இன்னொரு ஆச்சரியமான தகவல்..!

Thursday, October 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி இன்னொரு ஆச்சரியமான தகவலையும் படக்குழுவினர் கூறியுள்ளதால், ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின சிறப்பு விருந்தாக இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் கிராபிக்ஸ் பணிகள் தாமதம் ஆகி வருவதால், டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதி உடன் கூடிய போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ஒரு நாள் முன்பாகவே, அதாவது டிசம்பர் 5ஆம் தேதி 'புஷ்பா 2’வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த படம் மூன்றாவது பாகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த தகவலை தயாரிப்பாளரே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே தென்னிந்தியாவில் ’கேஜிஎப் சாப்டர் 3’ திரைப்படம் உருவாக இருக்கும் நிலையில், அதற்கு இணையாக 'புஷ்பா 3’ படமும் உருவாக இருப்பதை அறிந்ததால், ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சுனில் உள்பட பலர் நடித்த 'புஷ்பா 2’ திரைப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment