தேசிய விருது பெற்ற கையோடு சுறுசுறுப்பாகும் 'புஷ்பா 2' குழுவினர்.. படப்பிடிப்பில் ராஷ்மிகா..!
- IndiaGlitz, [Saturday,August 26 2023]
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது என்பதும் விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’புஷ்பா’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற விருது அந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கும், சிறந்த இசையமைப்பாளர் என்ற விருது தேவிஸ்ரீ பிரசாத் அவர்களுக்கும் கிடைத்தது. விருது கிடைத்த மகிழ்ச்சியோடு தற்போது அடுத்த கட்ட படப்பை படப்பிடிப்பை ’புஷ்பா 2’ குழுவினர் தொடங்கியுள்ளனர்.
இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் அதில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் தேவிஸ்ரீ பிரசாத் கம்போஸ் செய்துள்ள சிங்கிள் பாடலையும் விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சுனில் நடித்த இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார் என்பதும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.