படம் வெளியாக 10 நாட்கள் தான்.. 'புஷ்பா 2' இசையமைப்பாளர் மாற்றம்.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Tuesday,November 26 2024]

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தற்போது திடீரென இசையமைப்பாளர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள ’புஷ்பா 2’, டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான புரமோஷன் பணிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இந்த படத்தின் புரமோஷன் பணி சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் பின்னணி இசை பணியில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய இசையமைப்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், சில நிமிடங்களுக்கு முன் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் 'புஷ்பா 2’ படத்தில் இணைந்ததாக தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

சென்னையில் நடந்த ’புஷ்பா 2’ புரமோஷன் நிகழ்ச்சியில், தேவி ஸ்ரீ பிரசாத் கலந்து கொண்டார். அப்போது, அவர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். இதன் விளைவாக அவர் படத்திலிருந்து விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ’புஷ்பா 2’ படத்தில் மட்டுமின்றி அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி என்ற படத்திலும் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைப்பாளராக இணைய உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

More News

150 கோடி மேக்கிங் பட்ஜெட்.. தெலுங்கில் இருந்து வரும் ஹீரோயின்.. வில்லனாகும் மாஸ் நடிகர்.. SK25 தகவல்கள்,..

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்

உங்கள் வாழ்க்கையை மாற்றும் கேளக்கியர் சித்தர் வழிபாடு

கேளக்கியர் சித்தர் வழிபாடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். திரு. அசோகா ஆஸ்ட்ரோ அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்: விஜய் அறிக்கை..!

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன

ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி' ஆறாம் தொகுதி வெளியீடு..!

எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி' வெளியிடப்பட்டுள்ளது.

'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு முடிந்து விட்டதா? 'புஷ்பா 2' விழாவில் கிடைத்த ஆச்சரிய தகவல்..!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும்  'புஷ்பா 2' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.