'புஷ்பா 2' ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்.. இந்திய திரையுலகில் முதல் முறை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியதாகவும் இந்திய திரை உலகில் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத விலை ’புஷ்பா 2’ படத்திற்கு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக தயாராகி வந்தது.
இந்த நிலையில் ’புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தை அமேசான் பிரைம் ஓடிடி ரிலீஸ் உரிமையை வாங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’புஷ்பா 2’ திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.270 கோடி கொடுத்து வாங்கியதாகவும் இந்திய திரை உலகில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒரு திரைப்படம் ஓடிடி ரிலீஸ் வியாபாரம் ஆனது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
டிசம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படம் ஜனவரி 5ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் திரையரங்கிலும் ஓடிடியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com