'புஷ்பா 2' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? ரூ.1000 கோடி கிளப்பில் இணையுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்த படத்தின் நீளம் மட்டுமே ஒரே ஒரு குறையாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பு, ராஷ்மிகா மந்தனா, பகத் பாசிலின் கேரக்டர்கள் , திரைக்கதை, தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் மற்றும் சாம் சிஎஸ் பின்னணி இசை ஆகியவை பாசிட்டிவ்வாக உள்ளன என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இந்த படம், முதல் நாளில் மட்டும் சுமார் 283 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் ரூ.92 கோடி, தமிழகத்தில் ரூ.10 கோடி, கர்நாடகாவில் ரூ.17 கோடி, கேரளாவில் ரூ.6 கோடி, மற்றும் வட இந்தியாவில் ரூ.84 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவை தவிர வெளிநாடுகளில் இந்த படம் ஒரே நாளில் 68 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே ரீதியில் மூன்று நாட்களில் இந்த படம் வசூல் செய்தால் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்று கூறப்படுகிறது. ’பாகுபலி 2’ ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற படங்களின் வெற்றியை அடையுமா? முதல் நாள் கிடைத்த வசூல் அடுத்தடுத்த நாட்களிலும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments