'புஷ்பா 2' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? ரூ.1000 கோடி கிளப்பில் இணையுமா?

  • IndiaGlitz, [Friday,December 06 2024]

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்த படத்தின் நீளம் மட்டுமே ஒரே ஒரு குறையாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், அல்லு அர்ஜுன் நடிப்பு, ராஷ்மிகா மந்தனா, பகத் பாசிலின் கேரக்டர்கள் , திரைக்கதை, தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் மற்றும் சாம் சிஎஸ் பின்னணி இசை ஆகியவை பாசிட்டிவ்வாக உள்ளன என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் பிரமாண்டமாக சுமார் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான இந்த படம், முதல் நாளில் மட்டும் சுமார் 283 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் ரூ.92 கோடி, தமிழகத்தில் ரூ.10 கோடி, கர்நாடகாவில் ரூ.17 கோடி, கேரளாவில் ரூ.6 கோடி, மற்றும் வட இந்தியாவில் ரூ.84 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவை தவிர வெளிநாடுகளில் இந்த படம் ஒரே நாளில் 68 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே ரீதியில் மூன்று நாட்களில் இந்த படம் வசூல் செய்தால் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்று கூறப்படுகிறது. ’பாகுபலி 2’ ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற படங்களின் வெற்றியை அடையுமா? முதல் நாள் கிடைத்த வசூல் அடுத்தடுத்த நாட்களிலும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

More News

சன் டிவி தொடரில் இருந்து திடீரென விலகிய சஞ்சீவ்..  சஞ்சீவ் கேரக்டரில் புது மாப்பிள்ளை?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "லட்சுமி" என்ற சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவி நடித்து வந்த நிலையில், அந்த சீரியலில் இருந்து திடீரென அவர் விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக சமீபத்தில் திருமணம் ஆன நடிகர்

கட்டிப்பிடி வைத்தியத்தில் காதலை வெளிப்படுத்திய தர்ஷா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி மிகக் குறைந்த நாளிலேயே உருவாகிவிடும் என்ற நிலையில், இந்த சீசனில் 50 நாட்களுக்கு மேல் ஆகியும்

'அமரன்' உட்பட இந்த வாரம் எத்தனை தமிழ் திரைப்படங்கள்.. ஓடிடி ரிலீஸ் குறித்த விவரங்கள்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' உள்பட இந்த வாரம் எத்தனை தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன? தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்கள்

'விடாமுயற்சி': படப்பிடிப்பு முடியும் முன்பே முக்கிய பணியை தொடங்கிய அஜித்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டாலும் இன்னும் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மற்றும் சில காட்சிகளின் படப்பிடிப்பு

'புஷ்பா 2' படம் பார்க்க வந்த அல்லு அர்ஜுன்.. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாப பலி..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் வந்ததாகவும் அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததாக