இரண்டே நாளில் 'புஷ்பா' படத்தின் லைஃப் டைம் வசூல்.. 'புஷ்பா 2' செய்த சாதனை..!
- IndiaGlitz, [Saturday,December 07 2024]
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அந்த வசூலை இரண்டே நாட்களில் ’புஷ்பா 2’ திரைப்படம் செய்திருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இந்த படம் முதல் நாளில் 294 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு நாட்களில் 400 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் மொத்தமே 393 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டே நாட்களில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் அந்த வசூலை முறியடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை பார்க்கும் போது, 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து விடும் என்று டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேபோல் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் முதல் நாள் 72 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அந்த படத்தின் வசூலை ’புஷ்பா 2’ படம் முறியடித்துள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் முதல் நாளில் ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் 222 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அந்த சாதனையையும் ’புஷ்பா 2’முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.