ரூ.1000 கோடியை நெருங்கும் 'புஷ்பா 2'.. 'டங்கல்' 'பாகுபலி 2' சாதனையை முறியடிக்குமா?
- IndiaGlitz, [Tuesday,December 10 2024]
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படும் நிலையில், இந்த படம் தங்கள் ’பாகுபலி 2’ ‘டங்கல்’ சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. இந்த படம் முதல் நாளே கிட்டத்தட்ட 294 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் டிசம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை நான்கு நாட்களில் மட்டும் 829 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், 5 ஆம் நாள் வசூலையும் சேர்த்தால் 900 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்று அல்லது நாளைக்குள் ரூபாய் 1000 கோடியை நெருங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2024 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது.
இந்திய திரை உலகை பொருத்தவரை, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அமீர்கான் நடித்த ’டங்கல்’ திரைப்படம் 2000 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதேபோல், எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி 2’ திரைப்படம் 1810 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த இரண்டு சாதனைகளையும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் வசூல் மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
BIGGEST INDIAN FILM is the BIGGEST WILDFIRE AT THE BOX OFFICE 💥💥#Pushpa2TheRule becomes the FASTEST INDIAN FILM to cross 800 CRORES Gross worldwide with a 4 day collection of 829 CRORES ❤🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) December 9, 2024
RULING IN CINEMAS.
Book your tickets now!
🎟️ https://t.co/tHogUVEgCt#Pushpa2… pic.twitter.com/e4hyS3Jwqg