இதெல்லாம் என்ன மனநிலை? பிரபல இயக்குநரின் ஆவேசத்திற்கு என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கில் “போக்கிரி” , “பிசினஸ் மேன்” போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் பூரி ஜெகநாதன். தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் “லிகர்” எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவர் தற்போது சோஷியல் மீடியாவில் நடக்கும் சர்ச்சை குறித்து, இதெல்லாம் என்ன மனநிலை? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர், அன்பின் உருவம் கொண்ட அன்னை தெரசாவின் புகைப்படம் ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டது. இந்தப் புகைப்படத்திற்கு வெறும் 10,00 லைக்குகளே கிடைத்தன. ஆனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிஸ்லைக்குகள் குவிந்து இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
அந்த வகையில் தற்போது பிரபல இயக்குநர் பூரி ஜெகநாதன், இவர்கள் எல்லாம் யார்? சோஷியல் மீடியாவில் முகம் தெரியாது என்ற காரணத்திற்காக எது வேண்டுமானாலும் பேசலாமா? யாரை வேண்டுமானாலும் டிஸ்லைக் செய்யலாமா? இதெல்லாம் என்ன மனநிலை? இப்படி டிஸ்லைக் செய்வதன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறார் என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதோடு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு சோஷியல் மீடியாவி கணக்குகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்ற யோசனையையும் அவர் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே ஒருவரை ஒருவர் ட்ரோல் செய்வது, சோஷியல் மீடியாவில் கொச்சையாக பேசுவது போன்ற விஷயங்களால் கடும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கும் நிலையில் அன்னை தெரசாவின் புகைப்படம் டிஸ்லைக் செய்யப்பட்டதை அடுத்து இயக்குநர் பூரி ஜெகநாதன் ஆவேசம் அடைந்துள்ளார். இந்தக் கருத்து தற்போது மேலும் கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments