விஜய்யின் 'தளபதி 67' படத்தில் புரட்சி தளபதி? செம மாஸ்ஸா இருக்கும்போல!

  • IndiaGlitz, [Monday,October 31 2022]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் ஒவ்வொன்றாக கசிந்து வருகின்றன என்பதும் ஒவ்வொரு தகவலும் தமிழ் திரையுலகமே ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் த்ரிஷா ஆகிய மூன்று முன்னணி நாயகிகள் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய்தத், கௌதம்மேனன், பிரித்விராஜ் சுகுமாரன் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் புரட்சி தளபதி விஷால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஷால் வில்லனாக நடிக்கிறாரா? அல்லது தளபதி விஜய்க்கு கை கொடுக்கும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

விஜய் மற்றும் விஷால் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் இந்த படம் தமிழ் திரை உலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் விஷால்: திடீரென டுவிட்டை டெலிட் செய்தது ஏன்?

தமிழ் திரையுலகின் அதிரடி ஆக்ஷன் நடிகரான விஷால் திடீர் என பிரதமர் மோடிக்கு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

'விக்ரம்', 'பொன்னியின் செல்வன்' வசூலை முறியடித்ததா 'காந்தாரா'?

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் பெற்ற கமல்ஹாசனின் 'விக்ரம்' மற்றும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களின் வசூலை 'காந்தாரா' திரைப்படத்தின் வசூல் முறியடித்து உள்ளதாக

'ஆர்.ஆர்.ஆர்' படத்தை அடுத்து ஜப்பானில் ரிலீஸ் ஆகும் விஜய்யின் சூப்பர்ஹிட் படம்!

சமீபத்தில் பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ஜப்பானில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படம்

ஹன்சிகாவின் வருங்கால மாப்பிள்ளை இந்த தொழிலதிபரா? திருமண தேதி குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த ஹன்சிகா பிரபல தொழிலதிபரை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ட்விட்டர் புளுடிக் வைத்திருப்பவர்களுக்கு கட்டணம்.. மாதம் இத்தனை ஆயிரம் ரூபாயா?

பிரபலமானவர்களின் ட்விட்டர் பக்கத்திற்கு  புளுடிக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது என்பது தெரிந்ததே. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் கைக்கு வருவதற்கு முன்னர் வரை இது இலவசமாக வழங்கப்பட்டு