பெற்றோரையும் டீச்சரையும் கைது செய்யுங்கள்: ஊரடங்கு நேரத்தில் சிறுவன் கொடுத்த புகார்

  • IndiaGlitz, [Saturday,May 02 2020]

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தன்னை தன்னுடைய பெற்றோரும் ஆசிரியரும் டியூஷன் போக சொல்லி கட்டாயப்படுத்தியதாக 5 வயது சிறுவன் ஒருவன் போலீசில் புகார் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஊரடங்கு நேரத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் தன்னை மட்டும் டியூஷனுக்கு செல்ல பெற்றோர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், ஆசிரியரும் டியூஷனுக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் எனவே அவர்களை கைது செய்யுமாறு கோரி 5 வயது சிறுவன் காவல் துறையினரிடம் புகார் கொடுத்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் பட்டாவா என்ற பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து 5 வயது சிறுவனின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக ஆசிரியர் வீட்டுக்கு சென்று ஊரடங்கு நேரத்தில் டியூஷனுக்கு வரும்படி சிறுவனை கட்டாயப்படுத்த கூடாது என்று அறிவுறுத்தினர். அதன்பின்னர் அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் பெற்றோரிடமும் டியூசனுக்கு அனுப்ப கூடாது என்றும் சிறுவனை வீட்டிலேயே இருக்க வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி சிறுவனை வீட்டில் விட்டுச் சென்றனர். பெற்றோர் மற்றும் ஆசிரியர் மீது 5 வயது சிறுவன் கொடுத்த புகாரால் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

இந்தியாவில் 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 35,403ஆக இருந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,336 என அதிகரித்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றினாரா??? ஊடகங்கள் கூறும் தகவல்களின் தொகுப்பு!!!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த 20 நாட்களில் முதல் முறையாக பொதுவெளியில் தென்பட்டார் என்று வடகொரிய அரசு ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

வெளிநாட்டில் இருக்கும் கேப்டன் மகனை போட்டோஷூட் எடுத்த பிரபல இயக்குனரின் மகன்

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஏற்கனவே 'சகாப்தம்' மற்றும் 'மதுரை வீரன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

அஜித்தின் 'கண்ணான கண்ணே' பாடலை இசைத்த பிரபலத்தின் மகள்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் பட்டிதொட்டியெங்கும்

தமிழகம் முழுவதும் கொரோனாவை பரப்பிய கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட் சென்றால் சலுகை விலையில் அனைத்து காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் என்று எண்ணி சென்ற பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றாததால் தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.