பள்ளிகளுக்கு ஒலிம்பிக் வீரர்களின் பெயர்கள்… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பஞ்சாப்!
Send us your feedback to audioarticles@vaarta.com
2021 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் வென்று 48 ஆவது இடத்தைப் பிடித்தது. மேலும் கடந்த 2 ஒலிம்பிக் போட்டிகளை விடவும் இந்தியா அதிக பதக்கங்களை வென்று டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது.
இதைத்தவிர 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி முதல் முறையாக வெண்கலப்பதக்கம் வென்று ஒட்டுமொத்த இந்தியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் ஆண்கள் ஹாக்கி அணி வீரர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்கள் ஹாக்கி அணிக்கு அதிக பங்களிப்பை செய்திருக்கும் பஞ்சாப்பை சேர்ந்த வீரர்களுக்கு அம்மாநில அரசு ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்து இருக்கிறது. இதைத்தவிர தன்னுடைய மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் பெற்றிருக்கும் 11 ஒலிம்பிக் வீரர்களின் பெயர்களை பள்ளி, சாலைகளுக்கு சூட்ட இருப்பதாகவும் அமைச்சர் விஜய் இந்தர் சிங்கலா தெரிவித்து இருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தில் அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் கையெழுத்திட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் விஜய் இந்தர் சிங்கலா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 20 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஆண்கள் ஹாக்கி அணிக்கு மட்டும் 11 வீரர்கள் சென்றிருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் எதிர்காலச் சந்ததிக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் பதக்கம் பெற்ற ஒலிம்பிக் வீரர்களின் பெயர்கள் இங்குள்ள பள்ளி மற்றும் சாலைகளுக்கு சூட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout