9 இளம்பெண்களை 60 நாட்களாக பூட்டி வைத்த ஹவுஸ் ஓனர்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,May 19 2020]

நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த 9 இளம் பெண்கள் பஞ்சாப் மாநிலத்தில் தங்கியிருந்து பணி செய்து கொண்டிருந்த நிலையில் அந்த 9 பெண்களை கடந்த 60 நாட்களாக ஹவுஸ் ஓனர் பூட்டி வைத்து இருந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது

நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது இளம்பெண்கள் பஞ்சாப் தலைநகர் அமிர்தசரசில் பெண்கள் விடுதியில் தங்கி பணி செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் இல்லாமல் இருந்த பெண்கள் ஹவுஸ் ஓனரிடம் வாடகை கொடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த பெண்களை ஹவுஸ் ஓனர் அவர்களுடைய அறையிலேயே பூட்டி வைத்ததாகவும், கடந்த 60 நாட்களாக அந்த பெண்கள் பூட்டப்பட்டிருந்த அறையிலேயே இருந்ததாகவும் தெரிகிறது. அவர்களிடம் இருக்கும் ஒரே உணவு மேகி மட்டும் தான் என்றும் அந்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு இதுநாள் வரை இருந்து இருந்துள்ளனர் என்றும் தெரிகிறது.

இதன்பின்னர் இது குறித்து தங்களுக்கு தெரிந்த என்.ஆர்.ஐ ஒருவரிடம் அந்த பெண்களில் ஒருவர் உதவி கேட்க அவருடைய உதவி காரணமாக பஞ்சாப் போலீசார் அதிரடியாக அந்த வீட்டுக்குள் சென்று 9 பெண்களை மீட்டனர். மேலும் அந்த பெண்களை 60 நாட்களாக சிறை வைத்திருந்த ஹவுஸ் ஓனரையும் எச்சரித்துள்ளனர் மீட்கப்பட்ட பெண்கள் தற்போது அவர்களுடைய சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது