எங்க குடும்பத்திலேயே 9 ஓட்டு இருக்கு: 5 ஓட்டு பெற்ற வேட்பாளர் கதறி அழுத காட்சி!

எங்கள் குடும்பத்திலேயே ஒன்பது வாக்காளர்கள் இருக்கும்போது எனக்கு வெறும் ஐந்து ஓட்டுக்கள் மட்டுமே விழுந்துள்ளது. எனவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாக வேட்பாளர் ஒருவர் கதறி அழுத காட்சியின் வீடியோ வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் என்ற தொகுதியில் நீட்டு என்ற சுயேட்ச்சை வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது அழுதவாறே பேட்டி அளித்தார். இதுவரை எனக்கு ஐந்து ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்துள்ளது. எங்கள் குடும்பத்திலேயே ஒன்பது பேர் ஓட்டு போட்டுள்ளனர் என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் உங்கள் குடும்பத்தினர்களே உங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால் மக்கள் எப்படி போடுவார்கள்? என்று கேள்வி எழுப்ப அதற்கு அவர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள கோளாறால்தான் தனக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் உண்மையில் அவருக்கு வாக்கு எண்ணிக்கை முடிவில் 856 வாக்குகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சுய விளம்பரத்திற்காக அவர் ஐந்து ஓட்டுக்கள் மட்டுமே பெற்றதாக அழுது பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
 

More News

ரசிகரின் வாழ்நாள் கனவை நனவாக்க உதவிய சச்சின்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கடவுளாக கருதப்படும் சச்சின் தெண்டுல்கர் தனது தீவிரமான ரசிகர் ஒருவரின் வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளார்.

இன்னொரு எம்ஜிஆராக ரஜினிகாந்த் உருவெடுப்பார்: எஸ்.குருமூர்த்தி

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் ஒரு முடிவும் தமிழகத்தில் மட்டும் வித்தியாசமான முடிவும் கிடைத்துள்ளது.

மு.க.ஸ்டாலின், உதயநிதியை சந்தித்த விஷால்!

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக அலை சுனாமி போல் அடித்தபோதிலும் அதன் ஒரு சிறிய தாக்கம் கூட தமிழகத்தில் இல்லை

கார்த்தியின் 'கைதி' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்தியின் 'தேவ்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கைதி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'கசடதபற' படத்தின் ஆறு இசையமைப்பாளர்கள் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள 'கசடதபற' திரைப்படத்தின் ஆறு எடிட்டர்கள் மற்றும் ஆறு ஒளிப்பதிவாளர்கள் குறித்த தகவல்கள் வெளியான நிலையில்