விஜய்யின் 'மாஸ்டரை' ஓவர்டேக் செய்த சூப்பர் ஸ்டார் படம்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மற்றும் சாயிஷா நடிப்பில் உருவான ’யுவரத்னா’ என்ற திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி இன்னும் சென்னையில் கூட ஒரு சில திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அதாவது இன்று நள்ளிரவு முதல் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் 16 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியானது. ஆனால் புனித் ராஜ்குமாரின் ’யுவரத்னா’ திரைப்படம் மாஸ்டர் படத்தையும் ஓவர்டேக் செய்து வெளியாகிய எட்டே நாட்களில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்தே ’யுவரத்னா’ குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று இரவு 12 மணிக்கு ’யுவரத்னா’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளதை அடுத்து புனித் ராஜ்குமார் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
BREAKING: Puneeth Rajkumar’s #Yuvarathnaa is premiering on Amazon Prime, April 9th - 8 days from theatrical release day.
— LetsOTT GLOBAL (@LetsOTT) April 8, 2021
STREAM TONIGHT AT 12AM! pic.twitter.com/Di2mu9mM4C
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments