'கேஜிஎப்' வசூலை முறியடித்த புனித் ராஜ்குமாரின் கடைசி படம்!

கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்த நிலையில் அவரது பிறந்தநாள் அவர் இல்லாமல் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அவர் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜேம்ஸ்’ வெளியான நிலையில் இப்படம் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட திரையுலகை பொறுத்தவரை இதுவரை வெளியான திரைப்படங்களில் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற படம் என்ற பெருமையை யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படம் பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று வெளியான புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் அந்த வசூலை முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் ’ஜேம்ஸ்’ திரைப்படம் 27 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் இந்த படம் கர்நாடக மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ’கேஜிஎப்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில் ’ஜேம்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்

 தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10,700 திரையரங்குகளில் இன்று வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்: திரையுலகினர் வாழ்த்து!

சிவகார்த்திகேயன் நடித்த 'கனா'  திரைப்படம் சீனாவில் இன்று 10 ஆயிரத்து 700 திரையரங்குகளில் வெளியாவதை அடுத்து கோலிவுட் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

கிளாமர் நடனம்… ரசிகர்களை கிறங்க வைத்த பிக்பாஸ் நடிகையின் வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “துள்ளுவதோ இளமை” எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக

ரஷ்ய ராணுவம் தாக்குதலில் விருது பெற்ற பிரபல நடிகை பரிதாப பலி!

ரஷ்ய ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் விருது வென்ற பிரபல நடிகை ஒருவர் பரிதாபமாக பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல் படம் வெற்றியடைந்தால் இயக்குனர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்: மிஷ்கின்

ஒரு இயக்குனருக்கு முதல் படம் வெற்றி அடைந்து விட்டால் அந்த இயக்குனருக்கு பைத்தியம் பிடித்து விடும் என 'செல்பி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் பேசியது