புனித் ராஜ்குமாரின் கடைசி படத்திற்கு டப்பிங் கொடுத்தவர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,February 03 2022]

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அவர் நடித்து முடித்துள்ள கடைசி திரைப்படத்திற்கு அவருக்கு பதிலாக டப்பிங் கொடுத்துள்ள நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே பெரும் சுகத்தை அளித்தது

இந்த நிலையில் புனித் ராஜ்குமார் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று ’ஜேம்ஸ்’. இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் புனித் ராஜ்குமார் கேரக்டருக்கு அவரது சகோதரர் சிவராஜ்குமார் டப்பிங் குரல் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ’ஜேம்ஸ்’ படத்திற்காக சிவராஜ்குமார் டப்பிங் செய்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

பிரபல கன்னட இயக்குனர் சேத்தன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்து உள்ளார் என்பதும், இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.