தெறிக்கவிடும் ஃபுட் சேலஞ்ச்… வாடிக்கையாளர்களை ஈர்க்க புது ஐடியா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பூனேவில் உள்ள அசைவ உணவகம் கொரோனாவிற்கு பிறகு குறைந்து போன பிசினஸை அதிகப்படுத்த ஒரு விசித்திரமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் குறைந்தது 4 கிலோ அசைவ ரெசபிக்களை சாப்பிட்டால் ஒரு புல்லட் பைக் பரிசாகக் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது. 4 கிலோ தான? என அசால்ட்டாக நினைக்கலாம், ஆனால் அவர்கள் கொடுக்கும் ரெசிபிகளைப் பார்த்தாலே மயக்கமே வந்துவிடும் அளவிற்கு பட்டியல் நிண்டு கொண்டே இருக்கிறது.
பூனேவின் வாட்கன் மாவில் பகுதியில் அமைந்து உள்ள சிவ்ராஜ் ஹோட்டலில்தான் இந்த ஃபுட் சேலஞ்ச் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வின் எ புல்லட் பைக் (win a bullet bike) எனும் தலைப்பில் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த சேலஞ்சில் ஒருவர் குறைந்தது 60 நிமிடங்களுக்குள் 4 கிலோ எடையுள்ள அசைவ ரெசிபிகளை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு முடித்தால் அவருக்கு ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்ட் பைக் பரிசாக வழங்கப்படும்
இந்தப் ஃபுட் சேலஞ்சில் கிட்டத்தட்ட 12 வகையான அசைவ உணவு வகைகள் இருக்குமாம். மேலும் இந்த உணவுகளைச் சமைப்பதற்காகவே 55 பேர் கொண்ட ஒரு குழுவும் பணியாற்றி வருகிறது. இந்த ஃபுட் சேலஞ்சில் உள்ள ஒரு உணவின் விலை ரூ.2,500. இதில் வறுத்த மீன்கள், வறுத்த சுர்மாய், பொம்ஃப்ரேட் வறுத்த மீன், சிக்கன் தந்தூரி, மட்டன் வறுவல், சிக்கன் மசாலா, மற்றும் இறால் பிரியாணி போன்றவை இருக்கும். இந்த உணவை வெறும் 60 நிமிடத்தில் சாப்பிட்டு விட்டால் ஒரு ராயல் என்ஃபீல்டு பைக்கை பரிசாகப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு பறந்து விடலாம். இந்த சேலஞ்சில் கொடுப்பதற்காக சிவராஜ் ஹோட்டலின் உரிமையாளர் அதுல் வைகர் அந்த ஹோட்டலின் முன்பு 5 பைக்குகளை நிறுத்தி வைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout