விந்தணுவின் தரத்தை மேம்படுத்த... ஒரே ஒருபொருள் போதும்!

  • IndiaGlitz, [Monday,October 11 2021]

இன்றைய நாகரிகமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளினால் மனிதர்கள் உடல் ஆரோக்கியத்தில் எண்ணற்ற சிக்கலை சந்தித்து வருகிறோம். அதில் ஒன்றுதான் குழந்தையின்மை. இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்ளும்போது ஆண்களிடம் விந்தணு தரம் பற்றியும் கேள்வி எழுப்பப்படுகிறது.

இத்தகைய சிக்கலை எதிர்கொள்ளும் ஆண்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பதுதான் பூசணி விதைகள். கேட்பதற்கு விளையாட்டுத்தனமாக இருந்தாலும் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் பூசணி விதைகளின் தன்மைகளை விரிவாக ஆய்வு செய்துள்ளன.

பூசணி விதைகளில் இருக்கும் துத்தநாகம் விந்தணுவின் தரத்தை மேம்படுத்துவதோடு கருவுறுதல் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலும் உதவுகிறது. மேலும் விந்தணுவின் மேம்பாட்டு இது பக்கபலமாக இருக்கிறது.

பூசணி விதைகள் ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய ஒரு உணவாக இருப்பதால் தினமும் இதை உணவில் எடுத்துக் கொள்ளும்போது ஆண்கள் தங்களின் விந்தணு தரத்தை மேம்படுத்திக் கொள்ளமுடியும்.

விந்தணுவிற்கு மட்டுமல்ல, புரோஸ்டட் சிக்கலை தீர்ப்பதற்கும் இந்த பூசணி விதைகள் பெரிதும் கைக்கொடுக்கின்றன. அதாவது பாலியல் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இந்த பூசணி விதைகள் உதவுகின்றன.

பூசணி விதைகள் சிறந்த ஆன்டி ஆக்ஸிடண்டாக இருப்பதனால் மனித உடல் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு சாதாரணமாகவே உகந்த ஒரு உணவாகக் கருதப்படுகிறது.

பூசணி விதைகளில் அதிகளவு புரதம் இருப்பதால் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இதை எடுத்துக்கொள்ளலாம். ஒரு 100 கிராம் பூசணி விதைகளில் கிட்டத்தட்ட 23.33 கிராம் புரதம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் மருத்துவர்கள் சிற்றுண்டி உணவாகவும் இதைப் பரிந்துரை செய்கின்றனர்.

பூசணி விதைகள் சிறந்த டெஸ்டோஸ்ட்ரான் ஆரோக்கியத்தை தந்து விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி, கருவுறுதல் பிரச்சனையை தீர்த்து வைக்கிறது. எனவே ஆண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகளில் ஒன்றாக இந்த பூசணி விதைகள் இருக்கிறது. பாலியல் சார்ந்த விஷயங்களிலும் இந்த பூசணி விதைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சிறந்த இல்லற வாழ்வியலுக்கு வழிவகுக்கிறது.

மேலும் பூசணி விதைகள் ஹார்மோன் சார்ந்த செயல்பாடுகளிலும் மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது. ஹார்மோன் சுரப்பிகளை இந்த விதைகள் இயல்பாகவே வலுப்படுத்துகின்றன.

தாவரம் சார்ந்த புரதமாக இது இருப்பதனால் அனைத்து ஆண்களும் பயமில்லாமல் இதைச் சாப்பிடலாம். மேலும் இதிலுள்ள புரதம் தசைநார்களுக்கு சிறந்த ஊக்கியாக செயல்பட்டு அனைத்து எலும்புகளையும் வலுப்படுத்துகிறது.

பூசணி விதைகளில் எண்ணெய் பொருட்களும் இருக்கின்றன. எனவே உடல் பருமன் கூடிவிடுமோ என்ற சந்தேகம் வரலாம். உண்மையில் விதைகள், கொட்டைகள் போன்ற பொருட்களை உணவாக உட்கொள்ளும்போது மற்ற உணவு பொருட்களினால் ஏற்படும் உடல்பருமனைவிட மிகமிக குறைந்த அளவு உடல்பருமனையே நாம் எதிர்கொள்கிறோம். எனவே உடல்பருமன் குறித்த கவலையும் இதில் தேவையில்லை.

பூசணி விதைகளில் இருக்கும் துத்தநாகம் செல்களின் உற்பத்திக்கு பெருமளவு உதவிபுரிகிறது. எனவே புதுப்புது செல்கள் உருவாக்கத்தில் பூசணி விதைகள் பயன்படுகின்றன. மேலும் இதில் இருக்கும் பாஸ்பரஸ் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவிசெய்து உடலை வலுப்படுத்துகிறது.

இவையனைத்தையும் விட பூசணி விதைகள் முடி வளர்ச்சி மிகச்சிறந்த ஊக்கியாக இருக்கிறது. விந்தணுவின் தரத்திற்கும் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும் இந்தப் பொருளை அசைவம் தவிர்க்கும் ஆண்கள் கட்டாயம் எடுத்துக் கொள்வது அவசியம்.

More News

'அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க': 'அண்ணாத்த' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் 'அண்ணாத்த'.

கவினின் 'லிப்ட்' படத்தை அடுத்து ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பிக்பாஸ் பிரபலத்தின் படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவினின் நடித்த 'லிப்ட்' திரைப்படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் 'ஜெய்பீம்' புரமோஷன் வீடியோ!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதன் புரமோஷன் பணிகள்

வெண்மையோடு சேர்ந்த மென்மை… நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

ஜும் மீட்டிங்கில் ஆசிரியர் செய்த சேட்டை… கதிகலங்கிபோன நிர்வாகிகள்!

கொரோனா நேரத்தில் ஜும் மீட், கூகுள் மீட் போன்றவையே பலருக்கும் கதி என்றாகிவிட்டது.