ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கிய பூமா.. விலை எவ்வளவு தெரியுமா..?
- IndiaGlitz, [Monday,February 03 2020]
தடகள மற்றும் சாதாரண காலணி தயாரிப்பாளரான பூமா தனது முதல் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பூமா ஸ்மார்ட்வாட்ச் என்று அழைக்கப்படும் இந்த தயாரிப்பு கடந்த ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெர்மன் பன்னாட்டு நிறுவனம் Fossil குழுமத்துடன் சேர்ந்து கடிகாரத்தை வடிவமைத்துள்ளது.
பூமா மற்றும் Fossil-லால் தயாரிக்கப்பட்ட, பூமா ஸ்மார்ட்வாட்ச் கூகுளின் Wear OS-ல் இயங்குகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 Wear இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது. இது 390x390 பிக்சல்கள் கொண்ட 1.19-இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பூமா ஸ்மார்ட்வாட்சில் 512MB ரேம் மற்றும் 4 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.
பூமா ஸ்மார்ட்வாட்சில் புளூடூத் 4.2 மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஜி.பி.எஸ் ஆகியவை அடங்கும். பூமா ஸ்மார்ட்வாட்ச் பின்புறத்தில் இதய துடிப்பு டிராக்கரைக் கொண்டுள்ளது.பூமா ஸ்மார்ட்வாட்ச் பைலேட்ஸ், ரோயிங், ஸ்பின்னிங் மற்றும் வலிமை பயிற்சி உடற்பயிற்சிகளிலிருந்து count reps போன்ற செயல்பாடுகளை கூகுள் ஃபிட் (Google Fit) வழியாகவும் கண்காணிக்க முடியும். ஸ்மார்ட்வாட்ச் ஒர்க்அவுட் மோடில் செட் செய்தால், இது இதயத் துடிப்பையும் தொடர்ந்து கண்காணிக்கும்.
இது ஒரு Wear OS சாதனம் என்பதால், Google Assistant உள்ளமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் swimproof-ஐக் கொண்டுள்ளது மற்றும் Google Pay வழியாக NFC பேமெண்ட்டையும் கொண்டுள்ளது. பூமா ஸ்மார்ட்வாட்சில் உள்ள பேட்டரி திறன், 1 முதல் 2 நாட்கள் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
இதன் விலை ரூ. 19,995 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியா முழுவதும் உள்ள பூமா கடைகளில் கிடைக்கும். நீங்கள் ஆன்லைனில் இதை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட் மற்றும் பூமா.காமில் கிடைக்கும்.