பாவனா வழக்கில் திடீர் திருப்பம்: கைதாகும் பிரபலங்கள்?

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

பிரபல தமிழ், மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் விரைவில் மலையாள சினிமாவின் நட்சத்திர ஜோடி திலீப்-காவ்யா மாதவன் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.,
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் பல்சர் சுனி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முயன்றனர். ஆனால் போலீசார் தடுத்துவிட்டனர். இருப்பினும் பல்சர் சுனி, 'இந்த வழக்கில் விரைவில் பெரிய ஆட்கள் சிக்குவார்கள்' என்று மட்டும் கூறினார்
பாவனா வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே திலீப் மீது போலீசாரின் சந்தேகம் இருந்தது. அவரிடமும், அவரது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனிடமும் ஏற்கனவே போலீசார் விசாரணை செய்துள்ள நிலையில் மீண்டும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.
மேலும் பாவனாவை ஆபாசமாக படம் பிடித்த செல்போனில் இருந்த மெமரி கார்டை காவ்யா மாதவனின் நிறுவனத்தில் ஒப்படைத்ததாக போலீஸ் விசாரணையின்போது பல்சர் சுனி தெரிவித்துள்ளதாகவும் இதனால் திலீப், அவருடைய மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா, காவ்யா மாதவன் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திலீப், காவ்யா மாதவன் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சினிமா திரைக்கதையை விட விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த வழக்கில், ஆச்சரியத்தக்க கிளைமாக்ஸ் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

More News

ஆதார் இருந்தால்தான் திருமணம்! மத்திய அரசின் அடுத்த அதிரடி

கடந்த சில மாதங்களாகவே இந்திய குடிமகனின் அடையாள அட்டையான ஆதார் அட்டை எண்ணை அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ரேசன் கார்டு, பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு, பான் அட்டை உள்பட பல ஆவணங்களில் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது...

கேளிக்கை வரி விவகாரம்: லைகா நிறுவனம் அதிரடி முடிவு

கடந்த 1ஆம் தேதி ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்ததில் இருந்தே தமிழ்த்திரையுலகம் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி தமிழக அரசின் 30% வரியும் கட்ட வேண்டிய நிலை திரையுலகினர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்...

ரூ.500க்கு 4ஜி வோல்ட் இ போன்; ஜியோவின் அடுத்த ஆஃபர்

இந்திய தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து: சுப்பிரமணியம் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசினார். இந்த பேச்சு தமிழக அரசியலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கோலிவுட்டின் கருணை உள்ளத்தால் 'காதல்' விருச்சிககாந்துக்கு குவியும் பட வாய்ப்புகள்

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' படத்தில் நடித்த 'விருச்சிககாந்த் என்ற பாபு' சினிமா வாய்ப்பு இலலாத நிலையில் கோவிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்தார் என்பதையும் அவரை சமீபத்தில் தீனா மற்றும் மோகன் ஆகியோர் மீட்டு அவருக்கு தேவையான அடிப்படை தேவைகளை வழங்கி உதவி செய்தனர் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்...