close
Choose your channels

'சூரரை போற்று' படத்தை முந்திய பொங்கல் ரிலீஸ் படம்! டிஆர்பியில் சாதனை!

Friday, January 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ’சூரரை போற்று’ திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பொங்கல் தினத்தில் இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பானது. அதே நாளில் ஒளிபரப்பான மற்றொரு திரைப்படம் டிஆபியில் ’சூரரை போற்று’ படத்தை முந்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தீபாவளி நாளில் பல திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது சூரரைப்போற்று மற்றும் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ’புலிகுத்தி பாண்டி’ ஆகிய இரண்டு படங்கள்தான். இந்த இரண்டு படங்களில் டிஆர்பியில் எந்த படம் முதலில் வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள டிஆர்பி தகவலின்படி ’புலிக்குத்தி பாண்டி’ முதலிடத்தை பெற்றுள்ளது. ’சூரரை போற்று’ படத்திற்கு இரண்டாம் இடமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த டிஆர்பி விவரங்கள் ஆச்சரியத்தை அளித்து உள்ளன என்றாலும் சூர்யாவின் ’சூரரை போற்று’ திரைப்படத்தை ஓடிடியில் ஏற்கனவே பெரும்பாலான ரசிகர்கள் பார்த்து விட்டார்கள் என்பதும் தற்போது பார்த்தவர்கள் பெரும்பாலும் இரண்டாம் முறை பார்த்தவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் மசாலா கலந்த அதிரடி ஆக்ஷன் படமான புலிக்குத்தி பாண்டி’ படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக தொலைக்காட்சீயில் வெளியானதால் தான் அந்த படத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment