விஜய்யின் மின்னல்வேக வாள்சண்டை. அதிசயிக்கும் புலி படக்குழுவினர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பும் அதிகரித்து கொண்டே போகிறது. ரிலீஸுக்கு இன்னும் ஒன்பது நாட்களே இருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் இந்த படம் குறித்து புதுவிதமான செய்திகள் வெளிவந்து படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் 'புலி' படத்தில் பணிபுரிந்த ஒருவர் இந்த படத்தில் இடம்பெற்ற அபாரமான சண்டைக்காட்சி ஒன்று குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இந்த படத்தின் சண்டைக்காட்சியின்போது இயக்குனர் 'ஆக்சன்' என்று கூறியதும் விஜய் மின்னல் வேகத்தில் தயாராகி வாள்சண்டையில் ஈடுபட்டார் என்றும் இந்த சண்டைக்காட்சி அமைக்கப்பட்ட மேடையின் விளிம்பில் ஆக்ரோஷமாக வாள் சண்டை போடும்போது ஒரு காட்சியில் மேடையின் விளிம்பில் இருந்து விஜய் கீழே விழுவது போன்றும், ஆனால் விஜய் சுதாரித்து தன்னுடைய கையில் உள்ள வாளினால் தரையில் தாங்கி உடனே ஜெட் வேகத்தில் மீண்டும் எழுவதாகவும் ஒரு காட்சி உள்ளது.
இந்த காட்சியில் விஜய்க்கு கயிறு கட்டி இழுக்கலாம் என்று படக்குழுவினர் கூறியபோது, விஜய் தைரியமாக 'கயிறு தேவையில்லை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று கூறி மின்னல் வேகத்தில் அந்த காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து முடித்தார். அவரது அபாரமான பெர்மான்ஸை பார்த்த சுற்றியிருந்தவர்கள் தொடர்ந்து தங்கள் கைகளை பலநிமிடங்கள் தட்டி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். விஜய் போதும் என்று கூறியும் கைதட்டல் விண்ணை பிளந்தது. படப்பிடிப்பின்போதே இந்த கைதட்டல் என்றால் இந்த காட்சி திரையில் தோன்றும்போது என்ன நடக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து பார்த்து கொள்ளுங்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com