'புலி' 2வது டிரைலர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் முதல் டிரைலர் இந்திய அளவில் பல சாதனைகள் புரிந்து அனைவரையும் கவர்ந்த நிலையில் இன்று இந்த படத்தின் இரண்டாவது அட்டகாசமான டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாவது டிரைலர் பலருடைய சந்தேகங்களை தவிடுபொடி ஆக்கியுள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
'புலி' ஒரு மன்னர் காலத்து ஃபேண்டஸி திரைப்படம் என்ற செய்தி வெளிவந்தவுடன் அனைவரும் கேட்ட ஒரே கேள்வி, இந்த படம் பாகுபலி' அளவுக்கு இருக்குமா? ஒரு வருடம் படப்பிடிப்பு, ஒரு வருடம் கிராபிக்ஸ் பணி மற்றும் ரூ.250 கோடி பட்ஜெட்டின் பிரமாண்டம் கொண்ட 'பாகுபலி'க்கு இந்த 'புலி' இணையாகுமா? என்ற கேள்விதான் அனைவரின் மனதிலும் எழுந்தது. இந்த கேள்வியில் ஓரளவு நியாயம் இருக்கவே செய்தது. ஆனால் இந்த கேள்விக்கு முதல் டிரைலரில் ஓரளவு விடை கிடைத்திருந்தாலும், இரண்டாவது டிரைலரில் இந்த சந்தேகம் முற்றிலும் நீங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் 'பாகுபலி'க்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கும்படியான காட்சிகள் இந்த டிரைலரில் அமைந்துள்ளது. இவ்வளவு நேர்த்தியாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை செய்து, இந்த படம் குறித்து சந்தேகம் கிளப்பியவர்களின் வாயை அடைத்த கமலக்கண்ணன் மற்றும் அவரது சிஜி குழுவினர்களுக்கு பாராட்டுக்கள்.
மேலும் இந்த திரைப்படம் குழந்தைகளை குறி வைத்து எடுக்கப்பட்டது என்பதை இந்த இரண்டாவது டிரைலர் நிரூபித்துள்ளது. குழந்தைகள் மிகவும் விரும்பி விளையாடும் கம்ப்யூட்டர் விளையாட்டான 'டெம்பிள் ரன்' பாணியை பயன்படுத்திய விதம், ராட்சத ஆமையின் பிசிர் இல்லாத அமைப்பு, அந்த ஆமையிடம் விஜய் மரியாதையாக 'அய்யா' என்று அழைக்கும் பாணி, ராட்சத மனிதனுடன் விஜய் மோதும் சண்டைக்காட்சிகள், ஸ்ரீதேவி தூக்கியெறியும் ஒளிரும் துகள்கள், ஆகியவை குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
விஜய்யின் வித்தியாசமான ஸ்டைல் நடை, சுதீப் கர்வமாக உட்கார்ந்திருக்கும் காட்சி, ஸ்ருதிஹாசன் - ஹன்சிகாவின் அழகு, முத்துராஜின் பிரமாண்டமான செட்டிங்ஸ், அபாரமான பின்னணி இசை ஆகியவற்றை பார்க்கும்போது, இந்த படம் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வரும் ஆடியன்ஸ்களை முழு திருப்திபடுத்தும் வகையில் படைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி முழு படத்தையும் பார்க்கவுள்ள நமக்கு இந்த இரண்டு டிரைலர்களும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு சிறிதும் குறையாத வகையில் இந்த படம் அமைந்திருந்தால் கண்டிப்பாக இந்த திரைப்படம் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு தனி மரியாதையை பெறும் என்பது உறுதி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com