close
Choose your channels

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்தும் 'புலி' படக்குழுவினர்

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் செய்வதை இன்றைய நாளிதழ் விளம்பரங்கள் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அதே விளம்பரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் தமிழக அரசுக்கு நன்றி என்ற வாசகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் வார்த்தைக்காக மட்டும் இந்த நன்றி, 'புலி' படக்குழுவினர்களால் சொல்லப்படவில்லை. ஏனேனில் 'புலி' திரைப்படம் ரிலீஸ் ஆகும் அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜி கணேசனின் 87வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் இளையதளபதியின் படம் ரிலீஸ் ஆவது தற்செயலாக நடந்த ஒன்றாகவே இருந்தாலும், நடிப்புலக மேதைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே அன்றைய தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, மற்றும் பலர் நடித்துள்ள 'புலி' படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். 'வானவில் வட்டமாகுதே' உள்பட தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தயாரிக்கப்பட்ட விஜய் படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment