ஸ்ரீதேவி - 'புலி' தயாரிப்பாளர்களுக்கு இடையே சமரசம்

  • IndiaGlitz, [Friday,November 13 2015]

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வெளியாகி, ஊடகங்களின் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வசூலை பெற தவறியது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஸ்ரீதேவி தன்னுடைய சம்பளப்பணத்தில் ரூ.50 லட்சம் படத்தின் தயாரிப்பாளர் பாக்கி வைத்திருப்பதாகவும் அதை பெற்று தரும்படி மும்பை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறினார்.

ஸ்ரீதேவியின் புகாருக்கு சமீபத்தில் 'புலி' தயாரிப்பாளர்கள் ஒரு நீண்ட விளக்கத்தை அறிக்கை மூலம் அளித்தனர். இந்நிலையில் தற்போது 'புலி' படத்தயாரிப்பாளர்களுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே பிரச்சனை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதேவியை சமீபத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்ட 'புலி' படத்தின் தயாரிப்பாளர்கள் அவருடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் இறுதியில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.