3500 தியேட்டர்களில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது 'புலி'
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் பாடல் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்த படக்குழுவினர் அடுத்ததாக இந்த படத்தை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சில நாட்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்பட இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும் என்பதால், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு படக்குழு தயாராகி வருகிறது.
'பாகுபலி' படத்திற்கு பின்னர் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள திரைப்படமாக 'புலி' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் உருவான 'புலி', பாகுபலி' படத்தை போலவே தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
சாதாரணமாக உருவாகும் விஜய் படங்களுக்கே முதல் மூன்று நாட்கள் சிறப்பான ஓபனிங் இருக்கும். அப்படி இருக்கையில் இந்த படம் சரித்திர கதையுடன் ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் பணிகளுடன் கூடிய படமாகவும், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள விஜய் படம் என்பதாலும், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கின்றது. விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் தமிழ், தெலுங்கு வசூலுக்கும், ஸ்ரீதேவி இந்தி வசூலுக்கும், சுதீப் கன்னட வசூலுக்கும் உதவுவார்கள் என கூறப்படுகிறது.
'புலி' திரைப்படத்தை 3500 திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 1000 தியேட்டர்களிலும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 1000 தியேட்டர்களிலும், வட இந்தியாவில் 1000 தியேட்டர்களிலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் 500 தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இந்த எண்ணிக்கை கடைசி நேரத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இதுதவிர ஆங்கில சப்டைட்டிலுடன் உலகின் பல நாடுகளிலும் 'புலி' ரிலீசாகவுள்ளது. இந்த பிரமாண்டமான ரிலீஸ் ஏற்பாடுகள் அனைத்தும்'விஜய்' என்ற ஒரே ஒரு மாஸ் பெயருக்காகவே நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout