'பாகுபலி' டிரெண்டை மாற்றிய 'புலி' பர்ஸ்ட் லுக்

  • IndiaGlitz, [Friday,July 10 2015]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் ஆகிய இரண்டு அவருடைய பிறந்த நாளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று இரவு இந்த படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய பர்ஸ்ட் லுக்கில் சுதீப் மற்றும் ஸ்ரீதேவி இடது மற்றும் வலது புறத்தில் நிற்க, விஜய் நடுவில் கம்பீரமாக ஸ்டைலாக இருக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. 'புலி' படத்தில் ராணி வேடத்தில் ரீஎண்ட்ரி ஆகியுள்ள திரையுலக ராணியான ஸ்ரீதேவியின் ஸ்டைலைப் பார்த்து பாலிவுட் திரையுலகம் ஆச்சரியப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜய்யும், அகில இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையான ஸ்ரீதேவியும் இந்த படத்தில் இணைந்திருப்பதால், 'புலி' படத்தை இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. நேற்று பாகுபலி படத்தின் ரிலீஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான கருத்துக்கள் பரிமாறிக்கொண்டிருந்த நிலையில் திடீரென புலி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, சிலமணி நேரங்களில் டிரெண்டை மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படத்தை பி.டி.செல்வகுமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.