சத்யம் சினிமாஸ் திரையரங்கில் 'புலி'யின் புதிய் சாதனை

  • IndiaGlitz, [Wednesday,September 30 2015]

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' படத்தின் ஒவ்வொரு சாதனையும் வியக்கத்தக்க வகையில் இருந்து வருகிறது. இந்த படம் சென்னை மாயாஜால் காம்ப்ளக்ஸில் 60க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிட உள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் தற்போது மற்றொரு சென்னை திரையரங்கிலும் 'புலி' சாதனை செய்துள்ளது.

சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள சத்யம் சினிமாஸ் இந்திய அளவில் தரத்தில் பெயர் பெற்றது. அந்த திரையரங்கில் 'புலி' திரைப்படம் தினமும் 57 காட்சிகள் திரையிட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுவரை எந்த திரைப்படமும் இந்த காம்ப்ளக்ஸில் இவ்வளவு அதிக காட்சிகள் திரையிடப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரையரங்கில் இன்று முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் நான்கு நாட்களுக்குரிய டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துவிட்டது என்பதும் ஒரு பெரிய சாதனைதான் என்பது குறிப்பிடத்தக்கது.