close
Choose your channels

அரவிந்தசாமியின் பிறந்த நாளில் அடுத்த பட டைட்டில்!

Tuesday, June 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அரவிந்தசாமி இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக அவர் நடித்து வரும் படம் ஒன்றின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது

'ஹரஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' மற்றும் 'கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் அரவிந்தசாமி ஒரு படம் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இளம் இசைப்புயல் அனிருத் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு 'புலனாய்வு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

க்ரைம், டிடெக்டிவ், புலனாய்வு சம்பந்தப்பட்ட கதைதான் இந்த படம் என்பது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரின் டிசைனில் இருந்தே தெரியவருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். நயன்தாரா நடித்த கொலயுதிர்க்காலம்' உள்ளிட்ட ஒருசில தயாரித்த Etcetera எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகின்றது. இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அரவிந்தசாமி ஏற்கனவே 'சதுரங்க வேட்டை 2' மற்றும் 'நரகாசுரன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த இரு படங்களும் விரைவில் வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment