வெறிப்பிடித்த புஜாரா… 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடக்கும் மாயாஜாலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் வீரர் புஜாராவைப் பார்க்கும் சிலர், இவரை மாற்றிவிட்டு ஏதாவது நல்ல பிளேயரை போடுங்களேன். இந்த டொக்கு மன்னரை வைத்துக்கொண்டு எப்படி இந்திய அணியைத் தேற்றுவது என்பது போல கருத்துத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் டொக்கு மன்னன் புஜாரா செய்த காரியத்தைப் பார்த்து இங்கிலாந்து வீரர்களே மிரண்டுபோன சம்பவம் நடைபெற்றது.
இந்தியாவிற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா படு சொதப்பலாக வெறும் 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 3ஆவது டெஸ்ட்போட்டியின் வெற்றி இங்கிலாந்துக்குத்தான் என்பதுபோன்ற கருத்துகளை ரசிகர்களே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். மேலும் இதற்கு வலுசேர்க்கும் விதமாக இங்கிலாந்து அணியினர் முதல் இன்னிங்ஸில் 432 ரன்களை குவித்து மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி இருந்தனர்.
இதையடுத்து நேற்று 3 ஆம் நாள் போட்டியில் களம் இறங்கிய இந்திய அணி தற்போது 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களுடன் விளையாடி வருகிறது. அதிலும் புஜாரா 180 பந்துகளுக்கு 15 புண்டரிகளுடன் 91 ரன்களைக் குவித்திருந்தார். புஜாராவின் இத்தனை வெறிப்பிடித்த ஆட்டத்தைப் பார்த்திராத ரசிகர்கள் என்னப்பா இது? என்று ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் ஃபாலோ செய்யும் சில டிப்ஸ்களும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது டொக்கு வைப்பதைக் குறைத்துக்கொண்டு வரும் பந்துகளில் நன்றகா இருக்கும் பந்துகளை துணிந்து எதிர்கொள்து.? அல்லது பாலைத் தடுப்படுப்பதற்காக வேண்டி டொக் வைப்பது இந்த இரண்டு விதிகளை மட்டுமே தற்போது புஜாரா செய்துவருகிறார்.
3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் என்னதான் இந்தியா ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இங்கிலாந்து அணி 139 ரன்கள் வித்தியாசத்துடன் முன்னிலை பெற்றிருக்கிறது. அதனால் இந்திய அணிக்கு வெற்றிக் கிடைக்குமா? அல்லது தோல்விதானா? என்பது கணிக்க முடியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com