முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை அடிக்க கை ஓங்கினாரா விஜய் டிவி புகழ்.. அதிர்ச்சி வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,July 03 2024]

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களை அடிக்க விஜய் டிவி புகழ் கை ஓங்குவது குறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

’குக் வித் கோமாளி’ உட்பட சில விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான புகழ் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் ஒரு படத்தில் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் புகழ் தனது மனைவியுடன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் புகழ் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொம்மை நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவரிடம் சண்டை போடுவது போன்ற வீடியோவை புகழ் வெளியிட்டுள்ளார்.

உங்களுக்கும் எனக்கும் இனி பிசினஸ் பார்ட்னராக இருப்பது சரியா வராது, எனக்கு செட்டில் செய்து அனுப்பி விடுங்கள், என்னுடைய நம்பரையும் பிளாக் செய்து விடுங்கள் என்று டொனால்ட் டிரம்ப் பொம்மையுடன் புகழ் பேசும் காட்சிகளும் ஒரு கட்டத்தில் அவர் டொனால்ட் பொம்மையை அடிக்க கை ஓங்கும் காட்சியும் உள்ளன.

காமெடியாக இந்த காட்சி உருவாக்கப்பட்டாலும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை இப்படி இழிவுபடுத்தும் வகையில் செய்யலாமா என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

More News

வெங்கடேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் இணைந்த 'கோட்' நாயகி.. துப்பாக்கியுடன் மாஸ் போஸ்டர்..!

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார் என்றும் வெங்கடேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் கணவன் மனைவியாக

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்துன் மோதும் பிரபலத்தின் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பால் பரபரப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' திரைப்படம் ஜூலை 12-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் சோலோவாக வெளியாகும்

அஜித் அவசர அவசரமாக சென்னை திரும்பியது இதற்காகத்தானா? வேகமாக பரவும் வதந்தி..!

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் நாட்டில் 'விடாமுயற்'சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் நேற்று திடீரென சென்னை திரும்பினார் என்றும் அவர் தனது

இன்று நடிகை வரலட்சுமி திருமணம்.. வரவேற்பு எப்போது? சரத்குமார் வெளியிட்ட அறிவிப்பு..!

நடிகை வரலட்சுமி திருமணம் இன்று நடைபெறும் நிலையில் அவரது வரவேற்பு நிகழ்ச்சி எப்போது என்பது குறித்து அறிவிப்பை சரத்குமார் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

63 வயது நடிகருக்கு மனைவியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. புதிய போஸ்டர் ரிலீஸ்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.