என்ன ஒரு எடிட்டிங்? 'கண்டா வரச்சொல்லுங்க' பாடலுக்கு 'குக் வித் கோமாளி' புகழ் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் கிராமிய பாடகி மாரியம்மாள் என்பவர் பாடிய இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இந்த பாடலின் பின்னணியில் குக் வித் கோமாளி புகழ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது. ரசிகர் ஒருவர் எடிட் செய்துள்ள இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகழ், ‘என்ன ஒரு எடிட்டிங், இதை எடிட்டிங் செய்தவருக்கு எனது நன்றிகள்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோ குறித்து கமெண்ட்ஸ் பகுதியில் கமெண்ட்ஸ் பதிவு செய்த நெட்டிசன்கள் ’கண்டா வரச்சொல்லுங்க பாடலுக்கு பொருத்தமான புகழ் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் வேற லெவலாக இந்த வீடியோ இருப்பதாகவும் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments