'மிஸ் யூ': திருமணமான ஒரே வாரத்தில் வேதனையான பதிவு செய்த புகழ்!

  • IndiaGlitz, [Saturday,September 10 2022]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரையுலகில் பிஸியாக இருக்கும் புகழ் கடந்த வாரம் நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்ததே. இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது மானசீக குருவாக நினைத்த விஜய் டிவியில் பணிபுரிந்து காலமான வடிவேல் பாலாஜியின் புகைப்படம் முன் புகழ், தனது மனைவி பென்சியாவுடன் வணங்கி, ‘வடிவேல் பாலாஜி தங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று வடிவேல் பாலாஜி காலமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து புகழ் வேதனையுடன் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நீ எங்களுடன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் நீ இல்லை என்று நினைக்க முடியவில்லை. எப்பவுமே எங்களுடன் நீ இருப்பது போலவே இருக்கிறது மாமா. என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நீ, முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே... இதை எழுதும் போதே என் கண்கள் கலங்குகிறது, மிஸ் யூ மாமா.