பிக்பாஸ் வீட்டில் 2 பிரபலங்கள் திடீர் விசிட்.. வைல்ட்கார்ட் போட்டியாளர்களா?

  • IndiaGlitz, [Monday,November 13 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று திடீரென இரண்டு பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காட்சிகள் முதல் ப்ரோமோவில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தான் விஜய்டிவி புகழ் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய டாஸ்க்கை கேப்டன் தினேஷ் வாசித்துக் கொண்டிருக்கும் நிலையில், புகழ், ஸ்ருஷ்டி ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் உட்கார்ந்து இருக்கும் காட்சிகள் உள்ளதை அடுத்து அவர்கள் இருவரும் வைல்டுகார்டு போட்டியாளர்களா? அல்லது ஏதேனும் திரைப்படத்தின் புரமோஷனுக்காக வந்திருக்கிறார்களா என்பதை இன்றைய எபிசோட்டில் இருந்து தான் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் இன்று கொளுத்திப்போடு பட்டாசு என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு பட்டாசை எடுத்து அதில் உள்ள கருத்து எந்த போட்டியாளருக்கு பொருந்தும் என்பதை விளக்கத்துடன் கூற வேண்டும்.

முதலாவதாக ;வெடிக்கிறது ஒரு இடத்துல, சிதறி விழுகிறது ஒரு இடத்துல’ என்ற பட்டாசை பூர்ணிமாவுக்கு விசித்ரா வழங்குகிறார். ’பறந்து வெடிக்கும் என்று நினைக்கலாம், ஆனா புஸ்ஸுன்னு ஊர்ந்து போகும்’ என்ற பட்டாசை எடுத்த மாயா அதை அர்ச்சனாவுக்கு வழங்கினார். இதனை அடுத்து ’தூக்கி எரிகிறவங்க ஒருத்தரு அடி வாங்குவது இன்னொருத்தரு’ என்ற பட்டாசை எடுக்க வருவது யார் என்று காண்பிப்பதோடு இன்றைய புரமோ முடிவு பெறுகிறது.

மொத்தத்தில் பட்டாசு டாஸ்க் மற்றும் புகழ், ஸ்ருஷ்டியின் வரவு இன்றைய எபிசோடை எதிர்பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.