3 மில்லியன் பாலோயர்ஸ் பெற்ற நெகிழ்ச்சி....! நன்றி தெரிவித்த குக் வித் கோமாளி பிரபலம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
"குக் வித் கோமாளி" நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். விஜய் தொலைக்கட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் காமெடியனாக அறிமுகமானார். இதன் பிறகு தன்னுடைய கடின உழைப்பால், பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு ஆடல், பாடல், தனித்துவமனான கவுண்டர்கள், நகைச்சுவையான ரியாக்ஷன்கள் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன் வசம் இழுத்துக்கொண்டார். CWC-2-ல் பிரபலமானது மூலம் "பரட்டை புகழ்" என்ற யுடியூப் சேனல் ஒன்றை துவங்கி, அதன் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். அவரின் யுடியூப் தளம் 1.17 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய புகழை சுமார் 1மில்லியன் பாலோயர்ஸ் பின்தொடர்ந்தார்கள்.
இதைத்தொடர்ந்து CWC நிகழ்ச்சிக்குப்பின் பல போட்டோஷூட்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இதன்பின் நடிகர் சந்தானத்துடன் ஒருபடம், அருண் விஜயுடன் ஒரு படம் என படுபிசியாக இருந்து வந்தார். தற்போது மிர்ச்சி சிவாவுடன் இணைந்து "காசேதான் கடவுளடா" படத்திலும், CWC அஷ்வினுடன் இணைந்து "என்ன சொல்ல போகிறாய்...?" என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் புகழ் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தனக்கு இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோயர்ஸ் வந்ததை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது,
"ஒரு கலைஞனுக்கு அவனோட ரசிகர்கள் ஆதரவு எவ்வளவு பலமோ, அதேபோல தான் சமூக வலைதளங்களில் அவன் எட்டிபிடிக்கிற உயரமும் ரொம்ப முக்கியம்... அந்த வகையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 3M என்கிற நிலையை அடைந்திருக்கிறேன். ரசிகர்கள் அன்பால் மட்டும் தான் இந்த உயரத்திற்கு என்னால் வர முடிகிறது. இனியும் உங்கள் ஆதரவோடு மென்மேலும் பயணிக்க ஆசைப்படுகிறேன். என் மீது உண்மையான அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு நான் எப்போதுமே உண்மையாக இருந்து அவர்களை மகிழ்விப்பேன் என்பதை உறுதியாக சொல்கிறேன். அனைவருக்கும் அன்புகளும், நன்றிகளும்.????????????" என்று நெழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments