நிதியுதவி செய்த விஜய்க்கு நன்றி தெரிவித்த முதல்வர்: 

  • IndiaGlitz, [Thursday,April 23 2020]

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் போராடி வரும் நிலையில் அரசுக்கு உதவும் வகையில் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் நேற்று ரூ.1.3 கோடி நிதியுதவி குறித்த அறிவிப்பை தெரிவித்தார் என்றும், அதில் அவர் புதுவை மாநிலத்துக்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவி செய்வதாக அறிவித்து இருந்தார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தங்களது மாநிலத்துக்கு நிதி உதவி செய்த நடிகர் விஜய்க்கு புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றில் கூறியபோது ’நடிகர் விஜய் புதுச்சேரிக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். அவருடைய தாராளமான மனதை பாராட்டுகிறேன். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதேபோன்று மற்ற நடிகர் நடிகைகளும் புதுச்சேரி மாநில மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது