சிறுமி கொலையாளிக்கு தூக்கு தண்டனை: புதுக்கோட்டை எஸ்பி ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை ராஜா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்து கண்மாயில் உள்ள புதரில் வீசி சென்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து ஆவேசமாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்த நிலையில் இன்று சிறுமியின் உடலுக்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி மற்றும் புதுக்கோட்டை எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் இதுகுறித்துப் பேசியபோது ’இந்த வழக்கில் குற்றம் செய்தவர் ஒரே ஒருவர் மட்டும் தான். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து தகுந்த ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இனியும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்போம். மேலும் சிறுமியை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வாங்கித்தர காவல்துறை அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் என்று கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், ‘குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை நடந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனே பெற்றோர்கள் தகவல் அளிக்க வேண்டும். என்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் காவல்துறையிடம் இணைந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்’ என்றும் கூறினார்.
மேலும் சிறுமியின் பெற்றோர்களுக்கு முதல்வர் அளித்த 5 லட்சம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட உதவி தொகை ரூபாய் 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 காசோலை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments