தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து தற்கொலை செய்த இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுக்கோட்டை அருகே 19 வயது இளைஞர் ஒருவர் தனக்குத்தானே கண்ணீர் போஸ்டர் டிசைன் செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாத்திமா நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் 19 வயது சதீஷ்குமார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக சதீஷ்குமாரின் தந்தை அவரை திட்டியதோடு அடித்தும் உள்ளதாக தெரிகிறது
இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்கு முன்னர் அவர் தனக்குத்தானே ஒரு கண்ணீர் போஸ்டர் டிசைன் செய்துள்ளார். அந்த போஸ்டரில் தோற்றம், மறைவு உள்ளிட்டவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அந்த போஸ்டரை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி விட்டு திடீரென தலைமறைவானார்
சதீஷ்குமாரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் தலைமறைவான சதீஷ்குமாரை பல இடங்களில் தேடினர். இறுதியில் அவர்களின் கிராமத்துக்கு அருகே உள்ள மழவராயன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய சதீஷ்குமார் பிணமாக இருந்தார். இதனை அடுத்து அவரது உடலை கைப்பற்றிய குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்தனர்.
தற்கொலை செய்து கொண்ட ஒருவரை போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் இறுதிச்சடங்கு செய்ததை அடுத்து சதீஷ் குமாரின் தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments