தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து தற்கொலை செய்த இளைஞர்!

  • IndiaGlitz, [Thursday,July 23 2020]

புதுக்கோட்டை அருகே 19 வயது இளைஞர் ஒருவர் தனக்குத்தானே கண்ணீர் போஸ்டர் டிசைன் செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாத்திமா நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் 19 வயது சதீஷ்குமார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக சதீஷ்குமாரின் தந்தை அவரை திட்டியதோடு அடித்தும் உள்ளதாக தெரிகிறது

இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்கு முன்னர் அவர் தனக்குத்தானே ஒரு கண்ணீர் போஸ்டர் டிசைன் செய்துள்ளார். அந்த போஸ்டரில் தோற்றம், மறைவு உள்ளிட்டவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அந்த போஸ்டரை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி விட்டு திடீரென தலைமறைவானார்

சதீஷ்குமாரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் தலைமறைவான சதீஷ்குமாரை பல இடங்களில் தேடினர். இறுதியில் அவர்களின் கிராமத்துக்கு அருகே உள்ள மழவராயன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய சதீஷ்குமார் பிணமாக இருந்தார். இதனை அடுத்து அவரது உடலை கைப்பற்றிய குடும்பத்தினர் இறுதி சடங்குகளை செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் இறுதிச்சடங்கு செய்ததை அடுத்து சதீஷ் குமாரின் தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சோனியா அகர்வாலுக்கு திருமணமா? வைரலாகும் வீடியோ

கடந்த 2002ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 'காதல் கொண்டேன்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.

இணையத்தில் வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவரான ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'படையப்பா' திரைப்படத்தில் நீலாம்பரி என்ற கேரக்டரில்

முன்னாடி மாதிரியெல்லாம் கிடையாது, இந்துக்கள் முழித்துவிட்டார்கள்: ஜாகுவார் தங்கம்

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் குறித்து ரஜினி உள்பட பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் அவர்கள் இதுகுறித்து

உத்திரகாண்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு: உயிரிழப்பு அதிகரிக்குமோ என அதிகாரிகள் அச்சம்!!!

கடந்த சில தினங்களாக உத்திரகாண்ட் மாநிலத்தில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது

பெண்களைக் கடத்தி கட்டாயத் திருமணமா??? காலங்காலமாகத் தொடரும்  வன்முறை பழக்கம்!!!

இந்தோனேசியா எல்லைக்குட்பட்ட சும்பா தீவில் ஒரு விசித்திரமான பழக்கம் இருப்பதாகத் தற்போது பரபரப்பு கிளம்பியிருக்கிறது.