டிக்டாக்கில் குத்தாட்டம் போட்ட பெண்கள்: திடீரென மாறி மாறி புகார் அளித்ததால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Friday,November 13 2020]

டிக் டாக் மற்றும் சினாப்சாட் ஆகியவற்றில் குத்தாட்டம் போட்ட 2 பெண்கள் திடீரென மாறி மாறி காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுச்சேரியைச் சேர்ந்த ராஜவதனி என்பவரும் மேகவாணி ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். ராஜவதனி மிக அபாரமாக டிக்டாக்கில் டான்ஸ் ஆடியுள்ளார் என்றும், அவருக்கு ரசிகையாக மாறிய மேகவாணி அதன்பின் அவருக்கு தோழியாகி ஒருகட்டத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து குத்தாட்டம் போட்டதாக தெரிகிறது. டிக் டாக் தடை செய்யப்பட்டதை அடுத்து ஷேர்சாட்டில் இவர்களது வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென மேகவாணி மீது காவல் நிலையத்தில் ராஜவதனி புகார் அளித்தார். அதில் மேகவாணி தன்னிடம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கடன் வாங்கியதாகவும் ஆனால் அதில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து திருப்பிக் கொடுத்த பின்னரும் தன்னிடம் பணத்தை கேட்டு தகராறு செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்

இந்த நிலையில் திடீரென மேகவாணியும் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் ராஜவதனி தன்னிடம் 75 ஆயிரம் பணமும் 3 பவுன் தங்க நகைகளையும் மருத்துவ செலவிற்காக வாங்கியதாகவும் அதை திருப்பி கேட்டால் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், மேலும் தன்னுடைய வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென மீண்டும் ராஜவதனி ஒரு புகாரை அளித்தார். அந்த புகாரில் மேகவாணி தன் மீது வீண்பழி சுமத்தி வருவதாகவும், நான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த இருவரும் மாறி மாறி புகார் தந்ததால் இருவரில் யாரிடம் முதலில் விசாரிப்பது என்ற குழப்பத்தில் போலீசார் இருப்பதாக தெரிகிறது

டிக்டாக்கில் ஒன்றாக குத்தாட்டம் போட்ட 2 பெண்கள் பணப்பிரச்சினை காரணமாக திடீரென மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்திருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது