திடீரென ரஜினியை சந்தித்த சபாநாயகர்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Monday,June 19 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திடீரென சபாநாயகர் தனது மகளுடன் சென்று சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ’ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநில சட்டமன்ற சபாநாயகர் செல்வம் அவர்கள் ரஜினிகாந்தை தனது மகள் ஜனனியுடன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்படுகிறது

மொய்தீன் பாய் என்ற முஸ்லீம் கேரக்டரில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கையில இளநீர், கண்ணுல கூலிங்.. மாலத்தீவில் 'குட்டி நயன்' அனிகாவின் செம்ம போட்டோஷூட்..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நாயகி ஆக நடித்து வரும் குட்டி நயன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா சுரேந்திரன் மாலத்தீவு சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு

'லியோ'வை அடுத்து 'மாமன்னன்' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' படத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்'  திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ளதாக

என்ன ஆச்சு ராஷி கண்ணாவுக்கு? மினுமினுக்கும் கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

நடிகை ராஷி கண்ணா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மினுமினுக்கும் படு கிளாமரான கவர்ச்சி படங்களை பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'இந்தியன் 2' படக்குழுவினர் என்னை கொன்று விடுவார்கள்: செய்தியாளர்களிடம் காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது 'இந்தியன் 2' படம் குறித்த தகவல்களை தெரிவித்தால் என்னை படக்குழுவினர் கொன்று விடுவார்கள் என்று

முதல்முறையாக இரட்டை குழந்தைகளின் முகத்தை காட்டிய சின்மயி.. க்யூட் புகைப்படங்கள்..!

பாடகி சின்மயிக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் முதல் முறையாக தனது குழந்தைகளின் முகத்தை காட்டும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் கியூட்டாக