நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கு மாட்டிய இளைஞர்: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுச்சேரியில் நிச்சயிக்கப்பட்ட பெண், தன்னுடன் பேச மறுத்த ஆத்திரத்தில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
புதுச்சேரியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சட்ட கல்லூரியில் படித்தபோதே கடலூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் பின்னர் தங்களது பெற்றோர்களிடம் காதலை கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்து, திருமணம் வரும் 27ம் தேதி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது
இந்த நிலையில் நேற்று இரவு தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசியில் சுரேஷ் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்தப் பெண் போனை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து அவரது மொபைல் போனுக்கு வீடியோ கால் செய்த சுரேஷ், ‘நீ என்னுடன் பேச மறுத்தால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மின்விசிறியில் தூக்கு மாட்டியவாறு வீடியோ காலில் பேசினார்
சுரேஷ் விளையாட்டாக பேசுகிறார் என்று எண்ணி போனை ஆப் செய்து விட்டு அந்த பெண் தூங்கிவிட்டார். இருப்பினும் திடீரென அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு சுரேஷ் வீட்டிற்கு அருகில் இருந்த தனது நண்பருக்கு போன் செய்து விஷயத்தை கூறினார். அந்த நண்பர் உடனடியாக சுரேஷ் வீட்டுக்கு சென்று அவரது அறையை பார்த்த போது உள்பக்கமாக பூட்டி இருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுரேஷ் தூக்கில் தொங்கி மரணம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் மணப்பெண்ணுக்கு தெரிவிக்கப்பட்டதும் மணப்பெண்ணும் அவரது வீட்டாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சுரேஷால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்கொலைக்கு இதுதான் நிஜ காரணமா? அல்லது சுரேஷின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com