நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கு மாட்டிய இளைஞர்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,January 03 2020]

புதுச்சேரியில் நிச்சயிக்கப்பட்ட பெண், தன்னுடன் பேச மறுத்த ஆத்திரத்தில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புதுச்சேரியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சட்ட கல்லூரியில் படித்தபோதே கடலூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் பின்னர் தங்களது பெற்றோர்களிடம் காதலை கூறி திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் முடிந்து, திருமணம் வரும் 27ம் தேதி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது

இந்த நிலையில் நேற்று இரவு தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் தொலைபேசியில் சுரேஷ் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்தப் பெண் போனை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து அவரது மொபைல் போனுக்கு வீடியோ கால் செய்த சுரேஷ், ‘நீ என்னுடன் பேச மறுத்தால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மின்விசிறியில் தூக்கு மாட்டியவாறு வீடியோ காலில் பேசினார்

சுரேஷ் விளையாட்டாக பேசுகிறார் என்று எண்ணி போனை ஆப் செய்து விட்டு அந்த பெண் தூங்கிவிட்டார். இருப்பினும் திடீரென அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு சுரேஷ் வீட்டிற்கு அருகில் இருந்த தனது நண்பருக்கு போன் செய்து விஷயத்தை கூறினார். அந்த நண்பர் உடனடியாக சுரேஷ் வீட்டுக்கு சென்று அவரது அறையை பார்த்த போது உள்பக்கமாக பூட்டி இருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுரேஷ் தூக்கில் தொங்கி மரணம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் மணப்பெண்ணுக்கு தெரிவிக்கப்பட்டதும் மணப்பெண்ணும் அவரது வீட்டாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்

நிச்சயிக்கப்பட்ட பெண் பேச மறுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சுரேஷால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்கொலைக்கு இதுதான் நிஜ காரணமா? அல்லது சுரேஷின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கின்றதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

More News

கட்டுக்கட்டாக பணம், தங்க நாணயங்கள் புத்தாண்டு பரிசாக, லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரி..!

லஞ்சமாகப் பரிசு பொருள்களை வாங்கிக் குவித்த, வேலூர் மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் கையும் களவுமாகச் சிக்கினார்.

திருமணம் நடந்தபோது மணமகளின் படுக்கையறை காட்சியை திரையிட்ட மணமகன்: அதிர்ச்சி தகவல்

திருமணம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகளின் படுக்கை அறை காட்சியின் வீடியோவை மணமகனே திரையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

தொண்டையில் சிக்கியில் பஜ்ஜி! சென்னை பெண் பரிதாப மரணம்!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் பஜ்ஜி சாப்பிட்ட போது அந்த பஜ்ஜி தொண்டையில் சிக்கியதால் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

5 மொழிகளில் உருவாகும் பிரபல வில்லன் நடிகரின் படம்

ஹீரோ, வில்லன் என தமிழ் திரையுலகில் வலம் வந்த நடிகர் ஜீவன், காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்திற்கு முன்பே சோழர் வேடத்தில் விக்ரம்: ஒரு அபூர்வ ஒற்றுமை

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது