'புதுவசந்தம்' சித்தாரா நடிக்கும் புதிய சீரியல்.. உருக வைக்கும் புரமோ வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’புது வசந்தம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்த நடிகை சித்தாரா புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் ப்ரோமோ வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’புதுப்புது அர்த்தங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சித்தாரா, அதன் பின்னர் ’புரியாத புதிர்’ ’புது வசந்தம்’ ’படையப்பா’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னட மொழிகளிலும் நடித்த அவர் பல சீரியல்கள் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ’பூவா தலையா’ என்ற சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்க உள்ளார். இது குறித்த புரமோ வீடியோ சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
‘ஈரமான ரோஜாவே’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த சிவா உள்பட பலர் இந்த சீரியலில் நடிக்க உள்ளனர். அம்மா பாசத்தை பொழியும் வகையில் இந்த புரோமோ வீடியோவில் உள்ள காட்சிகள் இருப்பதால் இந்த சீரியல் நிச்சயம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மா என்றாலே பேரன்பு ❤️
— Sun TV (@SunTV) October 18, 2023
சன் குடும்பத்தில் இணையும் ஓர் புதிய குடும்பம் "பூவா தலையா"
விரைவில்.. #SunTV #PoovaThalaiya #PoovaThalaiyaOnSunTV #PoovaThalaiyaPromo #NewSerialOnSunTV pic.twitter.com/Fh9MtXUNE6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com