'புதிய பாதை' இரண்டாம் பாகம்.. டைட்டிலை அறிவித்த பார்த்திபன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பார்த்திபன் நடிகராக மற்றும் இயக்குனராக அறிமுகமான ’புதிய பாதை’ என்ற திரைப்படம் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் முதலில் கமல்ஹாசன் நடிக்க இருந்ததாகவும் ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட பார்த்திபன் நடித்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 34 ஆண்டுகள் கழித்து ’புதிய பாதை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணியை தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ’புதிய பாதை’ திரைப்படம் எப்போதும் என் மனதிற்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு படம் என்றும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்கால டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த படத்தை உருவாக்க உள்ளேன் என்றும் ’டார்க் வெப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆன தியாகராஜ பாகவதரின் படத்தை இயக்குவதற்காக ஆய்வு செய்து வருகிறேன் என்றும் ஆனால் இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்பதால் இந்த படத்தை உருவாக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி சிறை சென்ற நிலையில் அந்த கொலை வழக்கு குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறேன் என்றும் அதிகபட்ச தகவலை திரட்டியுடன் இந்த படத்தை தொடங்குவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments