தனக்குத்தானே 144 விதித்துக் கொண்ட கிராமம்! குவியும் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த கிராமம் ஒன்று தனக்குத்தானே 144 ஊரடங்கு விதித்துக் கொண்டு இருப்பது கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது உச்சத்தை தொட்டு மீண்டும் சரியத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் பாதிப்பு எண்ணிக்கை தற்போதுதான் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் அது உச்சத்தை தொட்டு, பிறகே சரியத் தொடங்கும் என்றும் வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கிராமங்களிலும் தற்போது கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் அடுத்த துதர்மட்டம் எனும் கிராமத்தில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அந்த கிராம மக்கள் ஒன்றுகூடி பேசி தனக்குத் தானே 144 ஊரடங்கு பிறப்பித்து கொண்டுள்ளனர். இந்த விதிமுறையின் படி அடுத்த 5 நாட்களுக்கு இந்த கிராமத்தில் உள்ள யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வெளியே இருந்து யாரும் கிராமத்திற்கு உள்ளே வரக்கூடாது.
மேலும் இந்த 5 நாட்களிலும் பால் போன்ற அத்யாவசியப் பொருட்களைத் தவிர வேறு எந்த சேவைகளும் இருக்காது. இந்தியா முழுக்கவே தற்போது கிராமங்களில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சிலர் நகரங்களை நோக்கி படையெடுக்கவும் ஆரம்பித்து விட்டனர். இதுபோன்ற சூழலில் தூதர்மட்டம் கிராமத்தைப் போலவே பொதுமக்கள் சுயக் கட்டுப்பாடு போட்டுக் கொள்ளும்போது அது மிகுந்த பலனைக் கொடுக்கும் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout